அச்சிறுப்பாக்கம் மலையை ஆக்கிரமித்து கிறிஸ்தவ கட்டடங்கள்: நடவடிக்கை எடுக்குமா வருவாய் துறை?

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=558484

மதுராந்தகம்: அச்சிறுப்பாக்கம் மலையை ஆக்கிரமித்து, கட்டடங்கள் கட்டிவரும் மலைமாதா கிறிஸ்தவ ஆலய நிர்வாகிகள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், அச்சிறுப்பாக்கத்தில், தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி, வனத் துறை கட்டுப்பாட்டில் உள்ள ஒரு மலை அமைந்து உள்ளது. வஜ்ரகிரி மலை எனப்படும் இதன் உச்சியில், பசுபதி ஈஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில், நீண்ட காலமாக பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். கீழிருந்து கோவிலுக்கு செல்ல, அரசு மேனிலைப் பள்ளி அருகில் படியும், எலப்பாக்கம் சாலையில் இருந்து மலை பாதையும் உள்ளது. பக்தர்கள் கோவிலுக்கு செல்ல, வனத் துறை அனுமதிக்கிறது. மலையில் நீண்டகால வழிபாட்டுத் தலமாக இக்கோவில் மட்டுமே உள்ளது.

கெடுபிடியும், அலட்சியமும்: சிறிய கோவிலான இதை, பெரிதாக கட்ட பக்தர்கள் முயன்றபோது, வனத் துறை தடைவிதித்தது. தற்போது, படியை மட்டும் செப்பனிட்டு அகலப்படுத்த, பக்தர்கள் முயன்றபோதும் வனத் துறை தடை விதித்தது. வனத் துறையின் கட்டுப்பாட்டில், காப்புக்காடாக அமைந்துள்ள இந்த பகுதி மட்டுமே, இயற்கை வளம் பாதிக்கப் படாமல் முறையாக பாதுகாக்கப் படுகிறது. ஆனால், இந்த மலையின் ஒரு பகுதியாக அமைந்துள்ள குன்று, வருவாய்த் துறை கட்டுப்பாட்டில், புறம்போக்கு பகுதியாக உள்ளதால் (சர்வே எண் 45/4), கிறிஸ்தவ வழிபாட்டுத்தல ஆக்கிரமிப்பால், சீரழிந்து வருகிறது. இது அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி எல்லையை ஒட்டிய, பள்ளிப்பேட்டை ஊராட்சியில் அமைந்து உள்ளது. இங்கு, ஒரு கிறிஸ்தவ அமைப்பு, 30 ஆண்டுகளுக்கு முன், மழை மலைமாதா ஆலயம் என்ற வழிப்பாட்டு தலத்தை துவக்கியது. துவக்கத்தில், ஊராட்சி அனுமதியுடன் மட்டும், இந்த ஆலயம் கட்டப் பட்டது. வருவாய்த் துறை அதிகாரிகள் இதை கண்டுகொள்ளவில்லை.

பிரமிப்பூட்டும் விரிவாக்கம்: முதலில், ஒரு சிலுவை மற்றும் சர்ச் ஆகியவற்றுடன், இத்தலம் அமைக்கப்பட்டது. இந்த அமைப்பிற்கு, நாளடைவில், வெளிநாட்டு நிதியுதவி குவிந்ததால், 2000ம் ஆண்டு முதல், வழிபாட்டுத் தலம் தொடர்ந்து விரிவுபடுத்தப் பட்டது. தற்போது, 9 ஏக்கர் குன்று புறம்போக்கு நிலம் ஆக்கிரமிக்கப் பட்டு சர்ச், தியான மண்டபம் உட்பட பத்துக்கும் மேற்பட்ட பிரமாண்டமான கட்டடங்கள் கட்டப் பட்டு உள்ளன. மலையிலும் ஏராளமான சிலுவைகளை அமைத்து, மேலே செல்ல படிகளும் கட்டப் பட்டு உள்ளன. தற்போது சாய்வு கோபுரம் என்ற மிகப்பெரிய கட்டடமும் கட்டப் படுகிறது.

பாதை ஆக்கிரமிப்பு: இந்த ஆலயத்திற்கு எலப்பாக்கம் சாலையில் வழி அமைந்து உள்ளது. அதை ஒட்டியே பசுபதி ஈஸ்வரர் கோவிலுக்கும் மலைப்பாதை உள்ளது. கிறிஸ்தவ அமைப்பு, அடிக்கடி, பசுபதி ஈஸ்வரர் கோவில் பாதையையும் ஆக்கிரமித்ததால் சர்ச்சை ஏற்பட்டு, இந்து அமைப்புகள் எதிர்த்தன. இதனால், மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டது. அப்போது வருவாய்த் துறை நடத்திய சமாதான கூட்டத்தில், மலையில் மேலும் கட்டடங்கள் கட்டக் கூடாது என, முடிவெடுக்கப் பட்டது. ஆனாலும், தற்போது, கிறிஸ்தவ அமைப்பு தொடர்ந்து கட்டடங்களை கட்டிவருகிறது. கட்டடம் கட்ட, மலையின் இயற்கை வளத்தை அழிக்கிறது. ஏராளமான மரங்கள், அபூர்வமான செடி, கொடிகள் மற்றும் தாவரங்கள் அழிக்கப் படுகிறன. வருவாய்த் துறை இடமாக அமைந்திருந்தும், அதை ஆக்கிரமித்துள்ள கிறிஸ்தவ அமைப்பு மீது, அதிகாரிகள் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. ஒரு அமைப்பு, மலையை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து கோலோச்சுவதால், தொடர்ந்து இயற்கை வளம் அழிக்கப்படுகிறது. மேலும், தொடர்ந்து ஆக்கிரமிப்புகள் நடக்க வாய்ப்பு உள்ளது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s