Landgrab complaint against Hindu ‘Ram’ by former MLA. N. Ram seeks anticipatory bail in case in HC

இந்து’ ராம் மீது முன்னாள் எம்.எல்.ஏ., புகார்

அக்டோபர் 01,2012,03:46 IST

கோவை:முன்னாள் அ.தி.மு.க., – எம்.எல்.ஏ.,வுக்கு சொந்தமான நிறுவனத்தில் புகுந்து, சொத்து ஆவணங்களை, வலுக்கட்டாயமாக பறித்துச் சென்றதாக, “தி இந்து’ நாளிதழின் முன்னாள் ஆசிரியர் என்.ராம் உட்பட 10 பேர் மீது, கோவை குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

முன்னாள் எம்.எல்.ஏ., மற்றும் எம்.பி.,யாக பதவி வகித்தவர் பழனிச்சாமி. கோவை அரசு கலைக் கல்லூரி சாலையில் சேரன் என்டர்பிரைசஸ் (பி) லிட்., என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார்.பிரபல ஆங்கில நாளிதழான, “தி இந்து’ நிறுவனத்தின் சார்பு நிறுவனத்தின் பங்குகளை, 2004ல் இவர் வாங்கியுள்ளார். சார்பு நிறுவனத்துக்கு சொந்தமாக, சென்னை மகாபலிபுரத்தில் உள்ள 400 ஏக்கர் நிலத்தை வாங்கியது தொடர்பாக, “இந்து’ ராம் உட்பட ஒன்பது பேருடன் சொத்து தகராறு ஏற்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, “இந்து’ ராம் மற்றும் சிலர், பழனிச்சாமியின் அலுவலகத்துக்குள் புகுந்து, சொத்து ஆவணங்களை வலுக்கட்டாயமாக பறித்துச் சென்றதாக, போலீசில் பழனிச்சாமி புகார் அளித்தார். இதன் அடிப்படையில், “இந்து’ ராம், ரமேஷ் ரங்கராஜன் உட்பட ஒன்பது பேர் மீது கொலை மிரட்டல், திருட்டு, கூட்டுச் சதி ஆகிய பிரிவுகளின் கீழ், கோவை கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விவகாரம் குறித்து, 2008ல் சென்னை போலீஸ் கமிஷனரிடம், பழனிச்சாமி புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை. சென்னை போலீஸ் கமிஷனரிடம், 2012ம் ஆண்டு துவக்கத்தில், மீண்டும் புகார் அளித்தார். @காவையில் நடந்த Œம்பவம் குறித்த வழக்கு என்பதால், புகார், @காவை @பாலீஸ் கமிஷனருக்கு அனுப்பப்பட்டது.அதன் பிறகும் நடவடிக்கை எடுக்கப்படாததால், பழனிச்Œõமி, öŒன்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் öŒ#தார். அதை, கடந்த ஏப்ரல் மாதம், விŒõரித்த நீதிபதி மதிவாணன், வழக்கு பதிவு öŒ#யுமாறு @காவை @பாலீஸ் கமிஷனருக்கு உத்தரவிட்டார்.

அதன்படி, மூன்று நாட்களுக்கு முன், @காவை குற்றப்பிரிவு @பாலீசார், “இந்து’ ராம், ரமேஷ் ரங்கராஜன், பிரேம் வத்சா, ராமசாமி அத்தப்பன், சந்திரன் ரத்தினசாமி, பால் ரிவெட், ஜோதிமணி மற்றும் மூவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

“இந்து’ ராம் மற்றும் அவரது சகாக்கள் கைதாகாமல் இருக்க, கடந்த, 27ல் கோர்ட்டில் முன் ஜாமினுக்கு விண்ணப்பித்துள்ளனர். ஜாமின் மீதான விசாரணை அக்., 3ல் நடக்கவுள்ளது.

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=557938

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s