Maha Periyava…….. Maha Anubhavam !!

உண்மையிலேயே மெய் சிலிர்க்க வைக்கும் அனுபவம் !!

கோமதி
ஒரு முறை ஸ்பெயின் நாட்டு அரச பரம்பரையைச் சேர்ந்த ப்ரபு ஒருத்தர் பெரியவாளை தர்சனம் பண்ண வந்தார். பக்கத்தில் ஸ்பானிஷ் மொழி பெயர்பாளர் ஒருவரும் இருந்தார். பெரியவா அவரிடம் ஸ்பெயினைப் பற்றியோ, கலாச்சாரம் பற்றியோ, மக்களைப் பற்றியோ எதுவுமே பேசவில்லை…….அவர் கேட்டது……..”ஒங்களோட அரண்மனைல new wing, old wing …ன்னு ரெண்டு portion இருக்கோ?”அவருக்கோ ஆச்சர்யம்! “ஆமாம் இருக்கிறது” என்றார்.”நீங்க எந்த wing ல இருக்கேள்?”சொப்பனத்தில் பதில் சொல்வது போல் “new wing ல இருக்கிறோம்”அடுத்த குண்டு……..”அங்க, ஜலம் மத்த வசதியெல்லாம் இருக்கோ?””ஆமாம் இருக்கு. அதனால்தான் அங்கே இருக்கிறோம்”அடுத்த மஹா குண்டு…….வந்து விழுந்தது! “அப்போ…..அந்த old wing உபயோகத்ல இல்லேன்னா….அதை இடிச்சுட்டு, அழகா நந்தவனமா பண்ணிடலாமே!”ஸ்பெயின் ப்ரபுவுக்கோ பொட்டில் அடித்தார்ப் போல் இருந்தது! தன் நாட்டு அரண்மனையைப் பற்றி இவ்வளவு விஸ்தாரமாக பேசுகிறாரே! தங்கள் குடும்பத்தார் அந்த பழைய பகுதியை என்ன பண்ணலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது, இந்த மஹானும் எல்லாம் அறிந்தவராக அதை என்ன பண்ணலாம் என்பதையும் சொல்கிறாரே! மெல்ல மொழி பெயர்ப்பாளரிடம் ” இந்த மஹான் எப்போது ஸ்பெயின் நாட்டுக்கு வந்தார்?” என்றார். அவர் தமிழில் ஆரம்பிக்கும் முன், பெரியவாளே சிரித்துக் கொண்டு தரையில் ஒரு பெரிய வட்டத்தைப் போட்டுக் காட்டினார்! ஸ்பெயின் ப்ரபுவுக்கு எல்லாமே புரிந்தது!இந்த உலகம் சிறியது…..என் கைக்குள் அடக்கம்! என்று சர்வேஸ்வரனான பெரியவா சொல்லாமல் சொன்னது புரிந்தது! “எனக்கு புரிய வைத்துவிட்டார். அவர்தான் இந்த உலகின் ஆதார சக்தி என்பதை!” என்று கண்கள் பனிக்க சொல்லிவிட்டு, நமஸ்காரம் பண்ணிவிட்டு, அனுக்ரகத்துடன் தன் நாட்டுக்கு கிளம்பினார். ———————————————————–
பெரியவாளே கதி! என்றிருக்கும் பல குடும்பங்களில் ஒன்றான ஒரு டெல்லி வாழ் குடும்பத்தில் மனைவிக்கு நெடுநாட்களாக ஏதோ உடலில் கோளாறு. என்ன சாப்பிட்டாலும் வாந்தி வந்து விடும். வெறும் ஹார்லிக்ஸை கரைத்துக் குடித்தபோது அதுவும் வாந்தியாக வெளியே வந்து அந்த அம்மா மயக்கம் அடைந்ததும், கணவர் பதறி அடித்துக் கொண்டு ஹாஸ்பிடலில் சேர்த்தார். இரவு முழுதும் I C U வில் இருந்தாள். நிஜமாகவே ரொம்ப ரொம்ப நல்ல டாக்டர் வந்து ” ஒங்க மனைவிக்கு உடல்ல எந்த கோளாறும் இல்லே……இந்த டெஸ்ட் அந்த டெஸ்ட்…ன்னு அனாவச்யமா பணம் பிடுங்குவா …….அதுனால, இப்பவே டிஸ்சார்ஜ் பண்ணிண்டு பேசாம ஆத்துக்கு போங்கோ” என்று சொன்னார். இவரும் பணத்தை செட்டில் பண்ணிவிட்டு மனைவியை பார்க்கச் சென்றார். அவள் சொன்னாள்…”நான் நேத்திக்கு ஆத்ல மயக்கமா விழுந்ததும், எனக்கு என் முன்னால பெரியவா நின்னுண்டு இருந்தா மாதிரி இருந்துது……..ஒனக்கு எல்லாம் செரியாயிடும்…..நாளைலேர்ந்து காலமே பல் தேச்சதும், ஒரு வில்வத்ல கொஞ்சம் விபூதி வெச்சு மொதல்ல சாப்டு….நாப்பத்தஞ்சு நாள்ல எல்லாம் செரியாப் போய்டும்….ன்னு சொன்னார்” வீட்டுக்கு போன மறுநாளே விடிகாலை வில்வமும் விபூதியும் சாப்பிட ஆரம்பித்தாள். வாந்தி என்ற வார்த்தையையே மறந்து விட்டாள். சரியாக 43 ஆம் நாளில், ஏதோ ஞாபகமறதியால் வில்வம் சாப்பிடாமல், காப்பியைக் குடித்துவிட்டாள். அவ்வளவுதான்! சாயங்காலம் கணவர் ஆபீசிலிருந்து வந்ததும் வாந்தியும் ஆரம்பித்தது. ஆனால், இம்முறை அதில் ரத்தம் தெரிந்தது! அரண்டு போய் டாக்டரிடம் காட்டி, T B யாக இருக்குமோ என்று கேட்டார். ஹாஸ்பிடல் போகும்போதே மனஸில் ” ப்ரபோ! ரெண்டு நாள் பாக்கி இருக்கறச்சே…வில்வம் சாப்டாம, காப்பி குடிச்சுட்டா……..தெரியாம பண்ணிட்டா…மன்னிச்சிடுங்கோ! அனுக்ரகம் பண்ணுங்கோ” என்று மன்றாடினார். டாக்டரும் TB இல்லை வெறும் பலஹீனம்தான் என்று சொல்லிவிட்டார். அன்று சாயங்காலம் வீட்டுக்கு வந்தபோது, ஆச்சர்யமாக அவர் மனைவி ரொம்ப ரொம்ப தெம்போடு அவரை வரவேற்றாள். அவள் சொன்னது……….”மத்யானம் பக்கத்தாத்து மாமி இங்க வந்தா…..நேத்திக்கு அவாத்து பிள்ளையோட கல்யாணம் மெட்ராஸ்ல நடந்தப்புறம் இளையாத்தன்குடி போய் பெரியவாளை தர்சனம் பண்ணப் போனாளாம்……அப்போ மாமி பெரியவாகிட்ட, “நான் டெல்லிலேர்ந்து வரேன்…..எங்காத்துக்கு பக்கத்ல இருக்கற என் ஸ்நேகிதிக்கு ஏதோ உடம்பு படுத்திண்டே இருக்கு ………பெரியவாதான் அனுக்ரகம் பண்ணணும்” ன்னு சொன்னாளாம்.அதுக்கு பெரியவா, ” என்னது! ஒன்னோட friend ஆ! பெரிய உபகாரியா? அடிக்கடி வாந்தி எடுக்கறாளாக்கும்?……எல்லாம் செரியாயிடும்” ன்னு சொல்லிட்டு, ப்ரஸாதம் குடுத்தாராம். மாமி அதை பிரிக்காம எங்கிட்ட குடுத்தா…….அதுல பெரியவா என்ன ப்ரஸாதம் குடுத்திருப்பார்…ன்னு சொல்லுங்கோ!” என்றாள்.பக்தர் கல்கண்டு, திராக்ஷை, குங்குமம், விபூதி என்று சொன்னார். கொண்டு வந்து காட்டினால்…….ஒரு சின்ன இலையில், ரெண்டே ரெண்டு வில்வ இலைகள்! 45 நாட்களுக்கு ரெண்டு நாள் இருக்கும் போது மறந்துபோய் காப்பி குடித்ததால், விட்டுப் போன ரெண்டு நாட்களுக்காக ரெண்டே ரெண்டு வில்வ இலைகள்!”நீ கண்டது கனவல்ல…நிஜம்” என்று நிருபித்த அழகு மகான்களுக்கே !!
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s