ரூ.20 கோடியிலான 4 சிலைகளை வெளிநாட்டுக்கு விற்க முயன்ற ஸ்தபதி, மந்திரவாதி உட்பட 6 பேர் கைது

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=13650

Thursday

2012-05-24

சென்னை : ரூ.20 கோடி மதிப்பிலான 4 சிலைகளை வெளிநாட்டுக்கு விற்க முயன்ற ஸ்தபதி, மந்திரவாதி உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அடுத்த சிறுவாச்சி கிராமத்தில் சிவன் கோயில் உள்ளது. இந்த கோயிலை புனரமைக்கும் பணி இந்து சமய அறநிலையத்துறை 80 ஆயிரம் ஒதுக்கியது. அதன்படி பல ஊழியர்கள் இந்த கோயிலை புனரமைப்புக்கும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, பூமிக்குள் புதைந்திருந்த 2 சிவன் சிலை, ஒரு பார்வதி சிலை, ஒரு சிவகாமி சிலை ஆகியவை கிடத்தன. இதனை பார்த்த ஸ்தபதி நாகராஜ் யாருக்கும் தெரியாமல் 4 ஐம்பொன் சிலைகளையும் மறைத்து வைத்தார். பின்னர் அதனை விற்றால் கோடிக்கணக்கில் பணம் கிடைக்கும் என்ற ஆசையில் ஸ்தபதி நாகராஜ் தனது நண்பர் வேதராண்யத்தைச் சேர்ந்த பாலகுமார்(39) என்பவரிடம் கூறினார்.

உடனே அவர் இந்த சிலைகள் ரூ.20 கோடி வரை போகும். இதனால் வெளிநாட்டில் விற்றால் இன்னும் அதிகம் பணம் கிடைக்கும் அதனால் என்னிடம் ஒரு சிலை இருக் கட்டும் என்று கூறி பார்வதி சிலையை எடுத்து சென்று விட்டார். இதையடுத்து ஸ்தபதி நாகராஜ் மற்றொரு நண்பரான தேவக்கோட்டை இழுப்பூரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற விஏஓ ஜெயராமனிடம் கூறினார். அவரும் தான் விற்று தருவதாக கூறி 2 சிவன் சிலை களை எடுத்து சென்று விட்டார். பின்னர் அதனை கூட்டாளியான குழந்தைவேலுவிடம் (44) கொடுத்து வைத்தார்.

இந்நிலையில் 4 ஐம்பொன் சிலைகள் திருடு போய் இருப்பது பற்றி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசுக்கு தகவல் கிடைத்தது. போலீஸ் ஐஜி ஆறுமுகம் உத்தரவின் பேரில் டிஎஸ்பி செல்வராஜ் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் நடராஜன், ரவீந்திரன், மலைச்சாமி ஆகியோர் தமிழகம் முழுவதும் தேடி வந்தனர்.

அப்போது கடந்த 20ம்தேதி சிவகங்கை மாவட்ட ரஸ்தா பகுதியில் கண்காணித்துக்கொண்டிருந்த போது ஒரு டாடா இண்டிகா கார் அதிவேகமாக சென்றது. உடனே போலீசார் துரத்திச் சென்று மடக்கி பிடித்தனர். அப்போது காரில் ஐம்பொன்னால் ஆன சிவகாமி சிலை இருந்தது. சிலையை மீட்டு காருக்குள் இருந்த ஸ்தபதி நாகராஜை கைது செய்தனர்.

இதையடுத்து அவரிடம் விசாரணை நடத்தி மற்ற சிலைகளான 2 சிவன் சிலைகள், ஒரு பார்வதி சிலையை மீட்டு கூட்டாளிகளான பாலகுமார், குழந்தைவேலு, தேவக்கோட்டையைச் சேர்ந்த முத்துக்குமார் (20), கண்ணன்(29), கோபால் (41) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதில் பாலகுமார் என்பவர் அதே பகுதியில் மாந்திரீகம் செய்து பேய் ஓட்டுபவர்.

பின்னர் கைதான 6 பேரை தேவக்கோட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். இவர்கள் கைதான தகவல் அறிந்து ஓய்வு பெற்ற விஏஓ ஜெயராமன், அவரது கூட்டாளிகள் சண்முகம், ரவி, ராஜா, வீரபாண்டி, பிரேம்குமார் ஆகியோர் தலைமறைவாகி விட்டனர். போலீசார் தேடி வருகின்றனர்.

ஜெர்மன் சிறையில் உள்ள கடத்தல் மன்னன்
சென்னை கொண்டு வரப்படுகிறார்

பொருளாதார குற்றப்பிரிவின் ஐஜி ஆறுமுகம் நிருபர்களிடம் கூறுகையில், “சிவகங்கையில் மீட்கப்பட்ட 4 சிலைகளின் மதிப்பு ரூ.20 கோடி. சிலை கிடைத்தது பற்றி ஸ்தபதி நாகராஜ் யாரிடம் கூறாமல் இருந்ததால் தான் அவரும் கைது செய்யப்படுகிறார். மற்ற 5 பேரும் கடத்தல் சிலைகளை வாங்கி விற்பவர்கள். மேலும் தலைமறைவாகி உள்ள 6 பேரும் இதுபோலத் தான். இவர்களை விரைவில் பிடித்து விடுவோம்.

தமிழகத்தில் புராதன சிலைகளை கடத்தி சென்று அமெரிக்காவில் கொல்கத்தாவைச் சேர்ந்த சுபாஷ்கபூர் மியூசியம் வைத்துள்ளார். இவர் மீது தமிழகத்தில் 36 சிலைக் கடத்தல் வழக்கு உள்ளது. இவரது கூட்டாளி சஞ்சீவ் அசோகன். இவர் தான் தமிழகத்தில் முதன் முதலாக சிலை கடத்தல் வழக்கில் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளவர்.

இவர் தான் பல சிலை களை இங்கு இருந்து கடத்திச் சென்று சுபாஷ் கபூருக்கு விற்றுள்ளார். சஞ்சீவ் அசோகன் கைதான தகவல் கிடைத்ததும் சுபாஷ் கபூர் தன்னுடைய மியூசியத்தை மூடிவிட்டு ஜெர்மனிக்கு தப்பி விட்டார். பின்னர் நாங்கள் சர்வதேச போலீசுக்கு தகவல் கொடுத்து அவரை கைது செய்யும்படி கூறினோம். தற்போது ஜெர்மனியில் கைதாகி சிறையில் உள்ளார். இவரிடம் நம்முடைய புராதன சிலைகள் 20க்கும் மேற்பட்டவைகள் உள்ளன.

அதனையும், சுபாஷ் கபூரையும் சென்னை கொண்டு வருவதற்காக அனைத்து முயற்சிகளை யும் எடுத்து வருகிறோம். சீக்கிரமே கொண்டு வந்து விசாரணை நடத்துவோம். கடந்த ஆண்டில் 9 சிலைக்கடத்தல் வழக்கில் 31 குற்றவாளிகளை கைது செய்துள்ளோம். அவர்களிடம் இருந்து 37 உலோக சிலைகள், 3 கற்சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s